தொடர்ந்து கல்முனை மேயராக இருந்தால் மக்கள் ஏமாற்றப்படுவர்-முபாறக் அப்துல் மஜீட்


ல்முனை மேயர் சிராஸ் தொடர்ந்தும் கல்முனை மேயராக இருக்க விரும்புவது என்பது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு ஊழல்வாதிகளால் உறிஞ்சப்பட வேண்டும் என்பதை விரும்புவதாக அமையும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கல்முனை சுபத'ரா விகாராதிபதி சங்கைக்குரிய சங்கரத்ன தேரருக்கு அப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தாங்கள் கல்முனை மேயர் சிராஸ் தொடர்ந்தும் கல்முனை மேயராக இருக்க வேண்டும் எனக்கூறி அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதவிருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். 

அவ்வாறு தனிப்பட்ட வகையில் கடிதம் எழுதுவது உங்களின் சுதந்திரம் என்பதால் அதில் நாம் தலையிட விரும்பவில்லை. ஆனாலும் 2010 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எமது கட்சியுடன் இணைந்து கல்முனையில் போட்டியிட தைரியமாக முன்வந்தவர் என்ற வகையில் நாம் தங்களை பெரிதும் மதிப்பதால் சில விடயங்களை சொல்ல வருகிறேன். 

அந்த வேளை உங்களை எமது கட்சி தேர்தல் வேட்பாளராக நாம் தேர்ந்தெடுத்ததற்காக எம்மை மிக மோசமாக சேறு வீசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரை தொடர்ந்தும் மேயராக இருக்க வைக்க வேண்டும் என தாங்கள் விரும்புவது எமக்கு கவலை தெரிகிறது.

தனிப்பட்ட வகையில் தங்களுக்கு மேயர் நல்லவராக தெரியலாம். நாமும் தனிப்பட்ட வகையில் அவர் பற்றி விமர்சிக்கவில்லை. அது எமக்கு அவசியமும் அல்ல. ஆனால் அன்று முதல் இன்று வரை கல்முனை மாநகர சபை பாரிய ஊழல்களைக்கொண்ட அலிபாபா கோட்டையாக உள்ளதை நாம் தெளிவாக அறிவோம். அதற்கு பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற சுயநலக்கட்சியும்,; சுய நலனுக்காகவே அக்கட்சியில் இணைந்து வெற்றி பெற்ற உறுப்பினர்களுமாவர் எனபதை நாம் தெளிவாக அறிவோம்.

நம்மோடு ஒருவர் தனிப்பட்ட வகையில் நன்றாக பழகுகிறார் என்பதற்காக பொது விடயத்தில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்பது சிறந்த சமயத்தலைவர் என்ற வகையில் தாங்கள் அறியாதவரல்ல. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் சமூகத்தின் பொது நலம் பற்றி சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் தங்களையும், எம்மையும் போன்றவர்களின் கடமை என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய நிலையில் இல்லை.

 இதன் காரணமாகத்தான் இந்தக்கட்சியால் ஏமாற்றப்படும் இந்த ஊரையே எதிர்த்து நாம் 2010 தேர்தலில் போட்டியிட்டோம். தனிப்பட்ட நலன்கள் நமக்கத்தேவையாயின் ஊரோடு ஒத்தோடியிருக்கலாம். அது, இறைவனை பயப்படும் சமூகம் பற்றிய ஆர்வலர்களுக்கானதல்ல என்பதாலேயே மக்களை ஏமாற்றி அவர்களின் முதுகில் சல்லாபிக்கும் இந்தக்கட்சிக்கெதிராக நாம் களமிறங்க வேண்டி வந்தது.

அந்த வகையில் கல்முனை மாநகர சபை தற்போது மட்டுமல்ல, முன்னரும் பாரிய ஊழல் கோட்டையாகவே உள்ளது என்பதை நாம் அறிவாம். தங்களின் கட்சி என்ற மக்களின் ஒரேயொரு அவாவை தமக்கு சாதகமாக பாவித்து அம்மக்களை இவர்கள் மிக மோசமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எம்மால் நிரூபிக்க முடியும்.

 ஆட்சிpயல் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களையும், மாகாண அமைச்சர்களையும் கொண்ட ஒரு கட்சியனால் ஆட்சி செய்யப்படும் கல்முனை எந்தளவுக்கு பின்தங்கியள்ளது, எந்தளவுக்கு மக்கள் ஏமாற்றப்டுகிறார்கள், உறுப்பினர்கள் எந்தளவுக்கு சம்பாதிக்கிறார்கள் என்பதை மிகத்தெளிவாக நாம் அறிவோம். 

வேண்டுமாயின் கல்முனையில் உள்ள வர்த்தகர்களை அழைத்து அதில் மேயரோ மு. கா உறுப்பினர்களோ கலந்து கொள்ளாமல் தங்களினதும் எமதும் சமூகமளித்தலுடன் சுதந்திரமான கருத்தரங்கை ஏற்பாடு செய்து பாருங்கள். மக்கள் தமது குமுறல்களை அள்ளிக்கொட்டுவதை காண முடியும்.

ஆகவே மேயர் சிராஸ் தொடர்ந்தும் கல்முனை மேயராக இருக்க தாங்கள் விரும்புவது என்பது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு ஊழல்வாதிகளால் உறிஞ்சப்பட வேண்டும் என விரும்புவதாக அமையும். இவரின் அனைத்து பிழைகளுக்கும் தாங்களும் பதில் சொல்ல வேண்டி வரும். அதே நேரம் பிரதி மேயர் நிசாம் காரியப்பரும் மேயராக வருவதை நாம் ஆதரிக்கவில்லை. அவருக்குப்பின்னால் மிகப்பெரிய கொள்ளைக்கோஷ்டி நாக்கை தொங்கவிட்டபடி உலவிக்கொண்டிருக்கிறது.

ஆகவே இது விடயத்தில் தாங்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என எதிர் பார்க்கிறேன். நன்றி, வஸ்ஸலாம்.


மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :