சீமானும் வைகோவும் இலங்கை வந்தால் நல்லா பிச்சை எடுக்கலாம்-அஸ்வர்


இலங்கையை  வைத்துக் கொண்டு  வயிறு வளர்க்கும் சீமானும் வைகோவும் இங்கு வந்து தெவட்டஹா பள்ளிவாசல் முன்பாக வெள்ளத் துண்டை விரித்து பிச்சை எடுத்தால் நன்றாகப் பிழைக்க முடியுமென  அரச தரப்பு  தேசியப் பட்டியல் எம். பி. யான ஏ. எச். எம். அஸ்வர்  ஆவேசமாகக் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கின் அபிவிருத்தி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆவேசப்பட்ட அஸ்வர் மேலும் கூறியதாவது ;தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் அரசிடம் கேட்டதில்லை. இவர்களின் ஆட்சியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அரசினால் வழங்கப்பட்ட நிதியுதவிகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரிக்கு வருகின்றன.

இவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறை இல்லை. இவர்களின் வேலை எப்படி அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக குழிபறிப்பது என்பதுதான். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தன் எம். பி. எப்போதாவது அங்குள்ள தென்னமர வாடி கிராமத்துக்கு  சென்றதுண்டா ? அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டதுண்டா ? அதனை நிறைவேற்றியதுண்டா ?

இப்படிப் பட்டவர்களை தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழ் மக்களாக  நினைத்து பிரதிநிதிகளை வரவேற்கிறார்கள்.  சீமானும் வைகோவும்  இலங்கையைக் காட்டி வயிறு வளர்க்கிறார்கள். வைகோ இங்கு  வந்தால் கிழக்கு மாகாணத்தில் விளைந்த தரமான நெல்லின் வைக்கோலை அவருக்கு உண்ணக் கொடுப்போம் இல்லாவிட்டால் சீமானும் வைகோவும் இங்கு வந்து தெவட்டஹா பள்ளி வாசல் முன்பாக வெள்ளைத் துண்டை விரித்து பிச்சை எடுத்தால் நன்றாகப் பிழைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் தமிழ் மெல்லன வளர்கிறது.  கம்பவாரிதி ஜெயராஜ் கம்பன் விழாவை தலைநகரில் நடத்தவுள்ளார். அது மிக சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்  தமிழ் வளர்ந்து கொண்டு வருகின்றது.ஆட்டோக்களில் செல்வோரை எதிரணிக் கட்சியில் வைத்துக் கொண்டுதான் இந்த நாட்டின் பெரும்  எதிர்க்கட்சியான ஐ. தே. க. இந்த நாட்டை ஆள முயற்சிக்கின்றதா ?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :