கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டு வருவது பாராட்டப்படவேண்டியது-அப்துஸ் ஸலாம்

( அஸ்லம் ஸஜா)
ன்று நாட்டில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகளுக்கு
மத்தியில் எமது சிறுவர்களின் எதிர்காலத்திற்காக தியாகத்துடன் செயற்பட
வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு முன் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின்
அம்பாறை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ் ஸலாம் கூறினார்.

சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. தலைவர் எஸ். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தேசிய போதைப்பொருள் குறைப்பு பிரிவின் இணைப்பாளரும் பிராந்திய உணவு,மருந்து பரிசோதகருமான எஸ்.தஸ்தகீர், சாய்ந்தமருது கிளையின் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான் ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

தியாகம் நிறைந்த ஆசிரியர்களின் பணியினால்தான் இன்று கல்விக்கான அடித்தளம்
இடப்படுகிறது. கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டு வருவது
பாராட்டப்படவேண்டியது. அதில் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் பங்கு
மகத்தானதாகும். இதன் தொடர்ச்சியில் நிறைவான கல்வியை வழங்குவதில்
பெற்றோரின் பங்கும் மிகமுக்கியமானதாகும்.

ஆரம்பத்தில் ஆசிரியர்கள் தியாக உணர்வுடன் கல்வி கற்பித்ததனாலேயே
எதிர்காலத்தில் வளர்ந்துவரும் மாணவர்களால் சிறந்த பெறுபேறுகள் பெற
வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்காக எமது ஆசிரியர்களுக்கு நாம் நன்றிகளை
தெரிவித்தக்கொள்கின்றோம். இந்த நிலை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்காக
எமது ஆசிரியர்கள் தியாக உணர்வுடன் மேலும் பணியாற்ற முன்வர வேண்டும்.

எமது சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர்களின் கல்விக்கான தேவைகளை
இனம்கண்டு அவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு தனவந்தர்களுக்கு இருக்கிறது.
எத்தனையோ ஏழை மாணவர்கள் பாடசாலைக்கல்வியைத் தொடர முடியாமல் இடைநடுவில்
கல்வியை கைவிடுகின்ற நிலை காணப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.
இவ்வாறானவர்களை இனம்கண்டு உதவுவதன் மூலம் எமது கமூகத்தில் நற்பிரஜைகளை
உருவாக்குகின்ற பணியை முன்னெடுக்க முடியும். இவ்வாறான வறுமையான மாணவர்கள்
கல்வியைத் தொடர முடியாமல் போவதால் சமூகத்தில் பல்வேறு குற்றச்
செயல்களுக்கு ஆளாகிறார்கள். இதன் மூலம் குடும்பம், சமூகம், நாடு என்ற
அடிப்படையில் பல்வேறு தரப்பினரும் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள
நேரிடுகிறது.

இவ்வாறான நிலையில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை சமூகத்தின் கல்வி
விடயத்தில் பாரிய சேவைகளைச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
அவர்களால் ஒவ்வொரு வருடமும் ஏழை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் எமது சமூகத்தின் முன்னுள்ள
தேவைகளை முன்நின்று சேவையாற்றும் மகத்தான பணியை பேரவையினர்
செய்துவருகின்றனர். அதுபோலதான் சாய்ந்தமருது கிளையினர் கல்வி இன்று பாலர்
பாடசாலை ஒன்றை நடாத்தி வருவதும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

இவ்வாறு எமது சமூக விழுமியங்களை பாதுகாத்து, சமூக சேவை செய்து வருகின்ற
அமைப்புக்களுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டியது சமூகத்தின் பல்வேறு
தரப்பினரதும் கட்டாயக் கடமையாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :