கிழக்கு முதலமைச்சருக்கெதிரான மாகாண அமைச்சர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கேலித்தனமானது.


கிழக்கு மாகாண முதலமைச்சருக்கெதிரான மாகாண அமைச்சர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கேலித்தனமானது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சராக உள்ள நஜீப் ஏ. மஜீத் எப்படிப்பட்ட செற்பாட்டாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் சமூகம் எத்தகைய நன்மையையும் பெறவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்த போதும் அவரால் எதுவும் முடியவில்லை.

 இப்படிப்பட்ட ஒருவரை முதலமைச்சராக்கியது தாமே என அமைச்சர் ரஊப் ஹக்கீம் அடிக்கடி பெருமைப்பட்டுக்கொண்டதையும் ஊடகங்களில் கண்டுள்ளோம். நஜீப் எப்படிப்பட்டவர் என்பது ரிசாத் பதியுதீன் மற்றும் அதாவுள்ளா கட்சியினருக்கும் தெரியும்.

இந்த நிலையில் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது தங்களது கட்சித்தலைமைகளின் எலும்புத்துண்டுகளை காப்பாற்றிக்கொள்வதற்காகவும் கிழக்கு மக்கள் எந்த நன்மையையும் அடைந்து விடாமல் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆதரவு கொடுத்தவர்கள் இப்போது முதலமைச்சர் திறமை அற்றவர் என கூக்குரலிடுவது அர்த்தமற்றதாகும்.

நன்றாக தூங்குபவர் என்று நன்கு தெரிந்தும் ஒருவரை மாப்பிள்ளையாக்கி விட்டு அய்யய்யோ தூங்குகிறாரே என உளறும் முட்டாள்தனத்தை போன்றதே கிழக்கு மாகாண அமைச்சர்களின் நடவடிக்கையாகும்.

முஸ்லிம் காங்கிரசால் பரிந்துரைக்கப்பட்ட நஜீப், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைப்போன்றே எதையும் செய்யாதிருக்கிறார். மு. கா தலைவர் ரஊப் ஹக்கீம் பதின்மூன்று வருடங்களாக அக்கட்சியின் தலைவராகவும் பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் இந்த முஸ்லிம் சமூகம் எத்தகைய சமூக நலனையும் காணவில்லை.

 இவற்றை வெளியே சொல்ல முடியாமல் அடிமையாகவுள்ள கிழக்கு மாகாண கோழை அங்கத்தவர்கள் நஜீப் ஏ. மஜீதுக்கு எதிராக முட்டுக்கட்டை போடுவது மக்கள் நலனுக்காக அன்றி வெறும் சுயநலமாகவே நாம் பார்க்கிறோம்.
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின் ஐ தே க, மற்றும் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என நாம் பகிரங்கமாக வேண்டினோம். 

ஆனால் மத்திய அரசில் தமது தலைவர்களின் அமைச்சுப்பதவிக்காகவும், கிழக்கு மாகாண சபையில் அமைச்சுக்களுக்காகவும் சமூகத்தை விற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ. இ. முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அதாவுள்ளாவின் கட்சியினரும் இப்போது முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பரேரணை கொண்டு வருவது தெரிந்து கொண்டே குழியில் விழுந்து விட்டு ஒப்பாரி வைக்கும் முட்டாள்களின் செயலாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :