மினிசூராவளியால் நிந்தவூர் வைத்தியசாலை கட்டிட சேதம்.


(எஸ்.அஷ்ரப்கான்)
ன்று (2013.05.13) அதிகாலை 04 மணியளவில் ஏற்பட்ட மினி சூராவளியினால்
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தின் பல
பகுதிகள் சேதத்திற்கு உட்பட்டிருந்தது. கடும் மழை காரணமாக வைத்தியாசாலையில்
உள்ள உபகரணங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலமையினை  கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் அவரின்
பிரத்தியோக செயலாளர் எம். இஸட். எம். முனீர் அவர்களும் பாதிக்கப்பட்ட
பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்களை நிந்தவூர் வைத்தியாசாலையின் வைத்திய அதிகாரியிடம் இருந்து கேட்டு அறிந்து கொண்டனர்.

இவ் வைத்தியாசாலை கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு
பின்பு அரச சார்;பற்ற நிறுவனம் ஒன்றினால் மீள நிர்மானிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும், நிந்தவூர் பிரதேசத்தில் மினி சூறாவழியினாலும் அதனை தொடர்ந்து பெய்த கடும் மழையினாலும் பாதிக்கப்பட்ட இடங்களை மாகாண சபை உறுப்பினர் நேரில் சென்று அவதானித்ததுடன் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து மக்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :