இந்த ஆண்டுக்கு உரிய நூற்றுக்குப் 10வீதமான பஸ் கட்டணத்தை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தென் மாகாண தனியார் துறை பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. பஸ்களுக்கு வர்ணம் பூசப்பட வேண்டும் என்று அரசு விதித்துள்ள சட்டம் உடனடியாகவே ரத்துச் செய்யப்பட வேண்டும்.
பஸ்கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த சட்டம் ரத்துச் செய்யப்படாதுவிடின்,பஸ்களுக்கு வர்ணம் பூசுவதற்கு ஒரு பஸ்ஸிக்கு 1,75,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று சம்மேளனத்தின் தலைவர் ஜீ.சந்தன சொய்ஸா தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டுக்கான பஸ்கட்டண உயர்வு கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனினும் டீசலின் விலை லீற்றருக்கு ஆறு ரூபாவால் உயர்ந்து சென்றிருந்தும் கூட பஸ் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கோ,நிவாரணத்தை வழங்குவதற்கோ, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டில் வழங்கப்பட வேண்டியுள்ள பஸ் கட்டண மீளாய்வு மூன்று மாதங்கள் கழிந்து சென்றுள்ள நிலையில், பஸ் கட்டணங்களுடன் சம்பந்தப்படும் செலவினங்களும் அதிகரித்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மின்கட்டணங்களை எதிர்வரும் 20திகதிக்கு முன்னர் ரத்துச் செய்யா விட்டால்21 ஆம் திகதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment