நானும் உரையாற்ற வேண்டும் எம்பியை மிரட்டிய அமைச்சர்.


நான் உரையாற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கத் தவறினால் உங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்ஸா சபைக்குத் தலைமை தாங்கிய ஆளும் கட்சி எம்.பி. உதித்த லொக்கு பண்டாரவுக்கு மிரட்டல் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே எதிர்க்கட்சி எம்.பி. க்களால் இடையூறு விளைவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு மிரட்டல் விடுத்தார்.

அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சுஜீவ சேனசிங்க எம்.பி. ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை சில கருத்துக்களை முன்வைத்தார்.

எனினும் அது ஒழுங்குப் பிரச்சினையுடன் தொடர்புபட்டதல்ல என்று சபைக்குத் தலைமை தாங்கிய உதித்த லொக்கு பண்டார எம்.பி. குறிப்பிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் சொய்சா உரையாற்ற முற்படுகையில் மீண்டுமொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்பட்டது.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தயாசிறி ஜயசேகர எம்.பி. அம்பாந்தோட்டை விமான நிலையம் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைத்தார்.

எனினும் அதுவும் ஒழுங்குப் பிரச்சினையுடன் பொருந்தவில்லை என அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் ஆவேசம்

இதனையடுத்து ஆவேசமடைந்த அமைச்சர் சொய்சா, நான் உரையாற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கத் தவறினால் உங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுப்பேன் என உரத்த குரலில் கூறினார். அவ்வாறு கூறியதுடன் உரையையும் தொடர்ந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :