அண்ணன் தன்னுடன் பாலியல் பலாத் காரம் புரிந்ததால் தங்கை தற்கொலை.



ன்னுடைய சகோதரியை கூடப் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கூறியும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்யாததால் மனம் உடைந்து போன அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட பெண் தனது 30 வயது தங்கையுடன் குவாலியரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவரது அண்ணன் லக்கான் பதாம் வீட்டுக்கு வந்துள்ளார். தன்னுடன் சொந்த வீட்டுக்கு வந்து விடுமாறு இருசகோதரிகளையும் கூப்பிட்டுள்ளார் பதாம்.

ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர். இதநால் கோபமடைந்த பதாம், தனது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார்.
இந்தக் கொடுமையைத் தடுக்க முடியாமல் இன்னொரு தங்கை கதறி அழுதது மேலும் கொடுமையானது. பின்னர் இரு சகோதரிகளும் பொலிஸ் நிலையம் சென்று நடந்ததைக் கூறி புகார் கொடுத்தனர்.

ஆனால் பொலிஸார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். எப்ஐஆர் போட மறுத்து விட்டனர். மேலும் இரு சகோதரிகளையும் அசிங்கமாகவும் திட்டி விமர்சித்துள்ளனர்.

இதனால்தான் மனம் உடைந்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக தற்போது விசாரணைக்கு மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :