தீர்வையற்ற வாகனங்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் பெறலாம்.



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இரண்டரை வருடங்களுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

முன்னர், இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்யும் மாகாண சபை உறுப்பிர்கள் மாத்திரமே தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதேவேளை, நாடாளுமன்ற
உறுப்பினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 50,000 அமெரிக்க டொல் கடன்களும் வழங்கியுள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை 120 – 150 மில்லியன் ரூபா பெறுமதிக்கு விற்பனை செய்வர். இந்த வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை அண்மையில் அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :