(எம்.பைஷல் இஸ்மாயில்)
திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் ஆகக் கூடுதலான சேமிப்புக்களை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சேமித்து அம்பாறை மாவட்டத்தில்
முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இலங்கை சமுர்;த்தி அதிகார சபையும் இணைந்து திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தினை நாடளாவிய ரீதியிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஏப்ரல் 14 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தியது.

அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 43 சமுர்த்தி வங்கிகளில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி அங்கீகரிக்கப்பட்ட வைப்புக்களின் மூலம் ரூபா. 2,176,335.00 நிதியினை சேமிப்பாக சேமித்து முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களை அம்பாறை வெருகடகொட சமுர்த்தி வங்கியும், நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியும் பெற்றுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வருட புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளமையும் இவ்வருடம் முதலாம் இடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளமையும் இவ்வருடம் முதலாம் இடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment