ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்.

புதுடெல்லி: சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், தங்களது கைக்கடிகாரத்தை சுற்றியும், டவலை பாக்கெட்டில் திணித்தும் புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் 7 பேர், டெல்லி காவல்துறையினரால் மும்பையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், புக்கிகளுக்கும் இடையே எவ்வாறு தகவல் சமிக்ஞைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது குறித்த தகவலை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

முதல் சூதாட்டம் கடந்த 5 ஆம் தேதியன்று புனே வாரியர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றபோது, ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 2 ஆவது ஓவரின்போது சந்திலா 14 ரன்களை வாரி வழங்கி உள்ளார்.

குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வாரி வழங்குவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு பலவிதமாக சமிக்ஞைகளை கொடுத்துள்ளனர்.



தங்களது கைக்கடிகாரத்தை சுற்றுவது, கையில் உள்ள சிறிய டவலை தங்களது பேண்ட் பாக்கெட்டில் திணிப்பது என புக்கிகளுக்கு சிக்னல் கொடுத்துள்ளனர். அதன்பின்னர் புக்கிகள் அடுத்து வரவிருக்கும் ஓவரை அடிப்படையாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பங்கு பணம், ஹவாலா முறையில் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :