(கே.சி.எம்.அஸ்ஹர்)தமிழிலே ஒரு பழமொழி உண்டு அதாவது –
ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்டதாம், ஒரு இணையத்தத்தில் வெளியான செல்வம் அடைக்கல நாதனின் அறிக்கையையும் செய்தி இணையத்தளத்தில் வெளியான சிவசக்தி ஆனந்தனின் அறிக்கையையும் பார்வையிட்ட போது அப்பழமொழியே எனக்கு ஞாபகம்வந்தது
வடக்கைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு அரச தொழில்களை வழங்கும் போதும் வீடமைப்புத்திட்டங்கள் வழங்கும் போதும் முஸ்லிம்களுக்கு கொடுக்கக்கூடாது அவர்கள் வெளிமாவட்டத்தவர்கள் எனக் கூறி மதபோதகரின் ஆலோசனையையும் பெற்று தமிழ் ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அமைச்சருக்கும் எதிரான சேற்றை வாரி இறைத்து ஆர்ப்பாட்டமும் நடாத்தி வந்த இவர்களுக்கு முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது.
இதில் ஏதோ கபட நாடகம் இருப்பதாகத்தோன்றுகிறது.'வடமாகாணத்தில் 5000 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாம்' அதில் 1500 மன்னாரில் குடியேற்றப்படவுள்ள தாம்.இரண்டு முஸ்லிம் கிராமங்களை அடுத்து ஒரு சிங்கள கிரமமாம், பின்னர் இரு தமிழ்க் கிராமங்களை அடுத்து ஒரு சிங்கள கிராமமாம் என அவர்கள் அறிக்கை வெளியிட்டு இறுதியில் வடக்கின் முஸ்லிம் அமைச்சர் மேல் பழியைச் சுமத்தி அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாதொழிக்க முயன்றுள்ளதை அறிய முடிகிறது.
எவ்வித அடிப்படையுமற்ற கற்பனைக்கதைகளைக் கட்டிச் செய்திகளாக வெளியிடாதீர்கள். பூரணமாக ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள். ஆசாத் சாலியின் கைதுக்கு எதிராகவும், அண்மைய முஸ்லிம்கட்கு எதிரான தாக்குதல்களுக்கெதிராகவும் நீங்கள் அறிக்கைவிட்டாலும் வடக்கு முஸ்லிம்கட்கு நீங்கள் செய்ததை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
0 comments :
Post a Comment