போலி நாணயத்தாள்களை வைத்திருந்த ஆறு இலங்கையர்கள்,இந்தியாவில் கைது.

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த ஆறு இலங்கையர்கள், புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்துல் அஸீஸ், மொஹமட் சலீம், லானீக், ரிஸ்னீ, ரஸபான் மற்றும் அப்துல் காதர் ஆகிய இலங்கையர்களே இவ்வாறு கைது செய்பய்பட்டுள்னளர்.

இவர்களிடமிருந்து சுமார் 28000 ரூபா பெறுமதியான போலி இந்திய நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆறு பேரில் இரண்டு பேர் 36000 ரூபா போலி நாணயத்தாள்களை வழங்கி விமான டிக்கட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள் மோசடி தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :