ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய வீரர்களை நினைவுகூரும் காலம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரை இந்தக் காலம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, தேசிய வீரர்கள் தினத்திற்கான முதலாவது கொடி அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கு இன்று அணிவிக்கப்படவுள்ளது.
தேசிய வீரர்கள் நினைவுக் காலத்தை முன்னிட்டு மாகாண மற்றும் பிரதேச ரீதியில் பாதுகாப்புப் படையினரால் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சிரமதானம், சமய நிகழ்வுகள் மற்றும் சமூகசேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, யுத்த வெற்றிக் கொண்டாட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 8 மணிக்கு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

0 comments :
Post a Comment