கிழக்கில் ஒரு நாள் சுகயீன லீவுப் போராட்டம்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

திர்வரும் செய்வாய்க்கிழமை 2013.05.14 ஆம் திகதி  கிழக்கில் ஒரு நாள் சுகயீன லீவுப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஆசிரியர் சங்கங்கள் உத்தேசியத்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சிற்கு விடுத்த கோரிக்கைக்கான காலக்கெடு கொடுத்து இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை எந்தச் செய்தியோ, பதிலோ கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளரிடமிருந்தோ அல்லது மாகாணக் கல்விப் பணிப்பாளரிடமிருந்தோ அல்லது ஆளுனரிடமிருந்தோ கிடைக்க வில்லை.

ஆசிரியர் சங்கத்தினால் விடுக்கப்பட்ட காலத்துக்குள் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததனால் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஜனநாயக ஆசிரியர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

அதற்கு அமைவாக எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒருநாள் சுகயீன லீவுப் போராட்டத்தில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பான ஒழுங்கமைப்புக் கூட்டம் நாளை (11) சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :