நான் இன்னும் பைத்தியக்காரத்தனமாக காதலிக்கிறேன் -சுபர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்


கிரிக்கெட் மீது எனக்கு இன்னும் தீவிரமான காதல் உள்ளது என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்.

மும்பையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் சச்சின்.

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சச்சின் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தையும், வெறியையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

சச்சின் கூறுகையில்,

இன்னும் எனக்கு கிரிக்கெட் மீது பைத்தியக்காரத்தனமான காதல் உள்ளது. அதை நான் தீவிரமாக காதலிக்கிறேன்.

எனக்கு 23 வருடமாக ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

கிரிக்கெட் மீது அன்புடன் இருப்பது முக்கியமானது. ஒவ்வொரு வீரருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான் – கிரிக்கெட்டை காதலியுங்கள். அப்போதுதான் அதில் ஈடுபாட்டுடன் இருக்க முடியும்.

கிரிக்கெட் மீது கண்மூடித்தனமான நேசத்தை வையுங்கள். அது உங்களை கடுமையாக உழைக்க வைக்கும். நானும் அப்படித்தான். இன்னும் எனக்கு காதல் போகவில்லை. இன்னும் தீவிரமாக நேசிக்கிறேன்.

அதேபோல என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்கள் மீதும் நான் தீராத நேசத்தை வைத்துள்ளேன். அவர்களுக்காக என்னால் முடிந்ததைத் தர விரும்புகிறேன், முயலுகிறேன் என்றார் சச்சின்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :