பொதுபல சேனா நாட்டில் முதலில் செய்ய வேண்டியது என்ன ? என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர சிங்கள மொழி தொலைக் காட்சி ஒன்றுக்கு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் நாம் சிங்கள் பௌத்தர்கள் என்ற அடிப்படையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு முன்னர் நாம் பௌத்தர்களைத் திருத்த வேண்டும் .
இன்று நமது நாடுதான் மதுபானப் பாவனையில் உலகில் 4 ஆம் இடத்தில் உள்ளது, ஆனால் நமது பெளத்த தர்மத்தில் நமக்கு மது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் பொதுபல சேனா முதலில் செய்ய வேண்டியது என்ன? முதலில் மதுபான சாலைகளை சுற்றிவழைக்க வேண்டும். உன்மையான சிங்கள பௌத்த குழுவென்றால் அவர்கள் இதை முதலில் செய்ய வேண்டும்.
பௌத்தர்களே அதிகமாக மது அருந்துகின்றனர். என தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் , அடுத்து கருத் தடை உபகரணங்கள் விற்பனை செய்யும் இடங்கள் சுற்றிவளைக்கப்பட வேண்டும். அப்போது சிங்கள் பௌத்தர்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே போல சூதையும் தடுக்க வேண்டும், இப்போது மரண வீடுகளில் 7 நாட்கள் மட்டிள் பினத்தை வைத்துக் கொண்டு சூது விளையாடுகின்றனர்.
அதாவது, முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும், நாம் செய்யும் தப்பான செயல்களை திருத்த முன்வர வேண்டும். அதன் பின்னரே அடுத்தவர்களின் பிரச்சினையைப் பார்க்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் அவர் மேற்கண்ட கருத்துக்களை நேற்று சிங்கள மொழி தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ளார் .

0 comments :
Post a Comment