(கல்முனை நிருபர்) அம்பாறை மாவட்ட மட்ட கால்பந்தாட்ட சுற்றுத்தொடரை கல்முனை பிரதேச
கால்ப்பந்தாட்ட அணியினர் கைப்பற்றி மாவட்ட மட்ட சம்பியனாக தெரிவாகினர்.
13 பிரதேச மட்ட கால்ப்பந்தாட்ட அணியினர் பங்குபற்றிய அம்பாறை மாவட்ட மட்ட
கால்ப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய
விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் கல்முனைப் பிரதேச செயலக அணியுடன் அட்டாளைச்சேனை பிரதேச
செயலக அணியினர் போட்டியிட்டு, 4:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கல்முனை
பிரதேச செயலக அணியினர் வெற்றிபெற்றனர்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேனவின் தலைமையில்
இடம்பெற்ற இந்த இறுதி போட்டிக்கு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர்
எம்.எம்.நௌபல், மாவட்ட உதைப்பந்தாட்ட பயிற்றுனர் எம்.ஐ.எம்.அமீர்அலி
உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், என
பலரும் கலந்துகொண்டனர்.
