தீக்குளிக்கவேண்டிய தேரர்கள் இருக்கும் போது வாழவேண்டிய தேரர் தீக்குளித்துள்ளார்-சத்தாதிஸ்ஸ தேரர்

தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் உயிர்வாழும் போது, வாழவேண்டிய போவத்தை இந்திர ரத்ன தேரர் தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் சில தேரர்கள் காலையில் தானத்தை உண்டுவிட்டு, பகலில் தானத்தை உண்ணும் வழியை மட்டுமே யோசிக்கின்றனரே தவிர நாடு இனம் தொடர்பாக எந்த வலியும் அவர்களுக்கு இல்லையெனவும், தங்களை விமர்சனம் செய்யமட்டுமே தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போவத்தை இந்திர ரத்ன தேரர் துணிச்சலான, சக்திமிக்க தேரர் எனவும் அவர் வாழவேண்டிய ஒருவர் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் எடுத்த முடிவு ஒன்று உள்ளது அது மாடுகளை வெட்டக்கூடாது என்பதாகும் அதற்காக இராவணா சக்தி அமைப்பு எழுந்து நிற்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தை இந்திர ரத்ன தேரரின் பூதவுடல் கடந்த செவ்வாய்க்கிழமை காவத்தை பொரனுவ மைதானத்தில் பெரும் திரளான பெளத்த குருமார் மற்றும் பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :