கொள்ளுப்பிட்டியில் வைத்து பெண்ணொருவரிடம் 50 ரூபாவை பிக்பொக்கட் அடித்த ஒருவர் 10 வருடங்களுக்கு பின்னர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.அக்குரஸ்ஸையை சேர்ந்த இந்திக்க மதுரங்க என்பவரையே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு விடுதலைச்செய்துள்ளார்.
இவர் மீதான குறித்த வழக்கு கடந்த 10 வருடங்களாக இழுப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் பிணை நிபந்தனைகளை மீறியமைக்காக கடந்த 3 மாதங்களாக தடுப்பு காவலிலும் அவர் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிமன்றத்தில் ஆஜராகததையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பல முறை பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே மேற்படி வழக்கில் விசேட கவனத்தை செலுத்திய கொழும்பு நீதவான் அவரை எச்சரித்து விடுதலைச்செய்தார்.
0 comments :
Post a Comment