.jpg)
இளைஞர்களை மனதளவில் காயப்படுத்தி தவறான வழிக்கு செலுத்துவதில் பேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் நோ தி நெட் என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அதிலும் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தருவதில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் ஆண்கள் அனுபவிக்கும் வலிகளை பார்ப்போம்...
இதில் 87 சதவீதம் பேர் பேஸ்புக்கினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
டுவிட்டர் தளத்தினால் 19 சதவீதம் பேரும்,பிளாக் பெர்ரியால் (பிபிஎம்) 13 சதவீதம் பேரும், ஆஸ்க் எப்.எம். மூலம் 9 சதவீதம பேரும், பிபோ மூலம் 8 சதவீதம் பேரும் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 4 சதவீதமும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது குறித்து சிலர் தான் தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்கின்றனர்.இது குறித்து அந்த பேஸ்புக் வலைத்தளத்தின் நினைவுப் பக்கங்களில் 21சதவீத இளைஞர்கள் பதிந்துள்ளனர்.உண்மையி்ல் பருவ வயதின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஆண்கள்,தம்முடைய விவேகத்தை வெளிப்படுத்துவதாகவும் எண்ணிக்கொண்டு, தனியே இப்பிரச்சினைகளை சமாளிக்க நினைக்கறார்கள்.
இவர்களால் நிச்சயம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியாது, இதனால் தற்கொலை நிலைக்குக் கூட தள்ளப்படுகின்றனர்.எனவே இந்த சமூக வலைத்தளங்கள் குறித்து ஆண்களும் நிச்சயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

0 comments :
Post a Comment