அரசின் பின்னணியிலேயே பொது பல சேனா -முபாறக் மௌலவி


(எஸ்.அஷ்ரப்கான்)
ரசின் பின்னணியிலேயே பொது பல சேனா இயங்குகிறது என்பதை ஆணித்தரமாக முன்வைத்த

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்துக்கள் பாராட்டுக்குரியன என முஸ்லிம் மக்கள்

கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவருமான
முபாறக் மௌலவி

தெரிவித்துள்ளார். இது விடயமாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்றும் சம்பிரதாய முஸ்லிம்கள் என்றும்

பிரித்து முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை தோற்றுவிக்கும் நோக்கில் அரச அணுசரனையுடன் புறப்பட்டதே பொதுபல சேனா என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆட்சியாளர்களால் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிடப்பட்டிருந்த பல விடயங்கள்
இந்த சேனா மூலம் நிறைவேறின. முஸ்லிம்கள் சட்டத்தரணிகளாக வருவதை தடுக்கு முகமாக
சட்டக்கல்லூரிக்கான தெரிவுப்பரீட்சையில் மாற்றம். ஹலால் உரிமையை ஒழித்தது,

பள்ளிவாயல்கள் தாக்குதல், அச்சமின்றி அபாயா போட முடியாத நிலை என பல விடயங்கள் வெற்றிகொள்ளப்பட்டு விட்டன. இலங்கை அரசாங்கம் புலிகளிடமிருந்து முஸ்லிம்களை காப்பாற்றியது என்பதில்

சந்தேகமில்லை. அரசின் பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டத்தில் அரசுக்கு முழு ஆதரவு கொடுத்தவர்கள் நாங்கள். அந்த வெற்றி என்பது எங்களின் உரிமைகளையும் பறிப்பதற்குத்தான் என்பதை எற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை தோற்கடித்தார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் உரிமைகளை தாரை வார்க்க முடியுமா? இது நான்தான் உனதுயிரை காப்பாற்றினேன் எனக்கூறி ஒருவரை வாழ்நாள் அடிமையாய்
வைத்திருப்பதற்கு சமமானதாகும்.

இத்தகைய சூழ் நிலைகளில் இந்த சேனாவையும் இதற்கு துணை போகும் அரசையும் வெளிப்படையாக கண்டிக்க முடியாத கோழைகளாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இஸ்லாமிய இயக்கங்களும், புத்திஜீவிகளும் இருந்தனர். இன்னும் சிலர் சேனாவை

மட்டும் கண்டிப்பதன் மூலம் அரசை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரச உதவியின்றி இத்தனை வெற்றிகளை இலகுவாக பெற்றிருக்க முடியாது என்பது தெரி;ந்தும் எலும்புத்துண்டுகளுக்காக இதனை செய்தனர். அரசின் உதவியினாலேயே முஸ்லிம்கள் இத்தனை பாதிப்புக்களை அடைந்தனர் என்பதை அசாத் சாலியும் நாமுமே சுட்டிக்காட்டினோம்.

அதே போல் அரசியல் சார்பற்ற அமைப்பு என்ற வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இதனை நேரடியாக துணிச்சலுடன் சுட்டிக்காட்டி வருகிறது. அவர்களது பத்திரிகையில் வெளியான பாம்பாட்டியான பாதுகாப்பு செயலாளர் என்ற தலைப்பிலான கட்டுரை பாராட்டும்படியாக உள்ளது. இவ்வாறு இது விடயத்தில் உண்மையை உள்ளபடி சொல்லும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின்; செயலை பாராட்டுகிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :