அலவி மெளலானுக்கு வரலாறு தெரியாமல் பொய் கூறுகிறார் என்கிறது பொதுபலசேனா.


ளுநர் அளவி மௌலானா இலங்கையின் சரித்திரம் பற்றி பொய் சொல்வதுடன், பௌத்தர்கள் மீதும், பொது பல சேனாவின் மீதும் வெறுப்பை ஊக்குவிப்பதோடு, சாதாரண முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை உண்டாக்குகின்றார் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.

கூரகலவில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதிக்கு நேற்று எழுதிய கடிதம் தொடர்பாகவே மேற்குறித்த ஊடக அறிக்கையை பொது பல சேனா வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது முற்றிலும் பிழையான தகவல். பொது பல சேனாவிற்கு கூரகலவில் அமைந்துள்ள எந்த ஒன்றையும் அழிக்கும் ஏற்பாடுகள் இல்லை. நாங்கள் கூரகலவில் அமைத்துள்ள வரலாற்று மற்றும் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கவே போராடுகின்றோம்.

கெளரவ ஆளுநர் போன்ற ஒரு பொறுப்பான நபர் எவ்வாறு தவறான தகவலை வைத்து கடிதம் எழுதியுள்ளார் என்பதை பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இது பொது பல சேனாவின் நாணயத்தை பாதிப்பதோடு சாதாரண முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தேவையில்லாத அச்சத்தை உண்டாக்கும். பொது நிதியை பயன்படுத்துகின்ற ஒரு பொறுப்பான நபர் என்ற வகையில் இந்த தகவலின் உண்மை தன்மையினை இவ்வளவு விளம்பரம் கொடுக்கும் முன் அவர் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு அறிக்கையினை விடுவதற்கு முன், இந்த தகவலின் உண்மை தன்மையினை அவரது அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ள எங்களது காரியாலயத்தில் உறுதிப்படுத்தி இருக்க முடியும்

அந்த வகையில் ஆளுநர் அளவி மௌலானா இலங்கையின் சரித்திரம் பற்றி பொய் சொல்வதுடன் பௌத்தர்கள் மீதும், பொது பல சேனாவின் மீதும் வெறுப்பை ஊக்குவிப்பதோடு, சாதாரண முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை உண்டாக்குகின்றார்.என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :