யாழ் பேரூந்து நிலையத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவருக்கு தர்மடி.





(சபீக்)
யாழ் பேரூந்து நிலையத்தில் இளம் பெண்களக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்த ரோமியோ. தர்ம அடி கொடுத்த மக்கள்.

நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம்பெண்களுடனும், பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் கல்வி நிலையம் செல்லும் மாணவிகளுடனும் அங்க சேஷ்டையிலும், பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்களும் மேற்கொண்டு வந்த நபருக்கு நேற்று தர்ம அடி கொடுக்கப்பட்டது.

இந்த நபர் பற்றி முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினரான நிஷாந்தனிடம், பொதுமக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து ஞாயிறு 05.05.2013 மாலை 04 மணியளவில் நேரில் சென்று அவதானித்த போது , தனியார் கல்விநிலையத்துக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம் புரிய முற்பட்ட போது நிஷாந்தனாலும் பொதுமக்களாலும் கையும் மெய்யுமாக பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்பு பொலிசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இவரை சோதனை செய்த பொழுது இவரது காற்சட்டைப்பையினுள் ஆணுறை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இவரைப் போல மேலும் பல ரோமியோக்கள் பற்றிய தகவல்களை மக்கள் வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் தர்ம அடி வழங்கப்படும் என்று நிஷாந்தன் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :