இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 11,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 34 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் டெங்கு நோய் தடுப்பில் தீவிரம் காட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் ஒழிப்பு குறித்து நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment