.gif)
கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று மாதாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தீப்பந்தங்களை ஏந்தியவாறு மாநகர சபை வளாகத்திற்குள் பிரவேசித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி அலுவலகத்திலிருந்து தீப்பந்தங்களை ஏந்தியவாறும், கறுப்பு நிற பட்டியை அணிந்தவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் மாநகர சபை உறுப்பினர்கள் பேரணியாக மாநகர சபைக்கு வருகை தந்தனர்.
மாநகர சபை வளாகத்திற்குள் பிரவேசித்த உறுப்பினர்கள், மாநகர சபை மண்டபத்தினுள் மெழுகுவர்த்தியை கொழுத்தியவாறு சென்றுள்ளனர். இவர்கள் மாநகர சபைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் மாதாந்த கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில் கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment