மரண வீட்டுக்குச் சென்ற பஸ்ஸும் ரயிலும் மோதுண்டு பாரிய விபத்து.

டலோர புகையிரத மார்க்கத்தின் பேருவளைக்கும் மக்கொனைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த எனும் இடத்தில் பஸ்வண்டியொன்றும் ரயிலும் மோதியதில் 20க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கண்டியிலிருந்து இறுதிக்கிரிகை ஒன்றுக்காக பஸ் வண்டியொன்றில் பயனித்தவர்களே கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.VK
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :