பொதுபல சேனாவின் செயற்பாடுகளைக் கண்டித்து அதன் அலுவலகத்துக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளதுர். பெளத்தத்தை பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படும்நிலையில் அதன் செயற்பாடுகளைக் கண்டித்து பெளத்தர்கள் உள்ளிட் சகல மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்திற்கு முன் ஒன்றுசேர்ந்தவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த, கிறிஸ்தவ முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் பொதுபல அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உடனேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளையில் பொதுபல அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற உடனேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்த பொலிஸார் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். இதலான் அங்குள்ளவர்கள் நலாதிசைகளிலும் சிதறுண்டு ஓடியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment