நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்கள்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் 3 - 1 தரத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இவ்விண்ணப்பங்களை 18 - 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகைமைகளாக க.பொ.த. சாதாரண தரம் ஒரே தடவையில் 3 திறமைச் சித்திகளுடன் தாய்மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தலுடன், க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அத்துடன் அங்கீகரிக்கப்பட் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, ஆட்சேர்ப்பு, சேவை நிபந்தனைகள், பரீட்சை பிரவேசித்தல், பரீட்சாத்தியின் அடையாளங்கள், பரீட்சை முறை அல்லது பரீட்சை மொழி ஆகிய விபரங்களை பெற்றுக் கொள்வதற்கு ஏப்ரல் 12ஆம் திகதி வர்த்தமானியை பார்வையிடலாம். என கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :