நல்லதோர் உள்ளம் பலமிக்கதோர் நாடு' மாணவர்களின் நிகழ்வு.

(எம்.பைஷல் இஸ்மாயில்)
பிரதம மந்திரி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நல்லெண்ண மனப்பான்மைகளை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட 'நல்லதோர் உள்ளம் பலமிக்கதோர் நாடு' எனும் தொனிப்பொருளிலான சித்திரம், மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு பிரதம மந்திரியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.எச்.ஜீ.பண்டார தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் றஞ்சித் சியம்பலாப் பிட்டிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  

குறிப்பிடப்பட்ட போட்டியில் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை உள்ளிட்ட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைக்கப்பட்டது.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :