முஸ்லிம்கள் சார்பாகப் பேசிய சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள்- ஹனீபா


(எம்.பைஷல் இஸ்மாயில்)

முஸ்லிம்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறும் பள்ளிவாசல்களைத் தாக்குவது போன்ற மிக மோசமான செயல்களில் பௌத்தர்கள் ஈடுபடக் கூடாது என்று கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி தனது அறிக்கையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயாவை எமது அமைப்பினரும், நானும்  பாராட்டுகின்றோம். என அக்கரைப்பற்று சமூக வேவைகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம்.ஹனிபா தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று மாலை (2013.04.10) இடம்பெற்ற சமூங்களுக்கிடையிலான சந்திப்பு நிகழ்வு அக்கரைப்பற்றில் இடம்பெற்றபோது அங்கு கலந்து கொண்ட  சமூக வேவைகள் ஒன்றியத்தின் தலைவர் ஏ.எம்.ஹனிபா கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முஸ்லிம் கட்சிகளில் இருக்கின்ற தலைவர்கள் தங்களின் வாயில் பிலாஸ்டர் ஒட்டியவர்கள் போன்று நாடாளுமன்றத்தில் உட்காந்திருக்க ஆர்.சம்பந்தன் என்பவர் இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிவரும் கொடுமையான வன்முறைகளைப் பற்றி முஸ்லிம் சமூகத்தினருக்காக குரல் கொடுத்துள்ளார். இதனை முஸ்லிம் தலைவர்களான சில அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தங்களின் வாக்குகளை வாரி வழங்கி அமைச்சர்களாக்கியது இதற்கத்தானா? என்ற கேள்வியை நான் முஸ்லிம் அமைச்சர்களாகவும், தலைவர் என்ற போர்வையில் இருக்கின்ற தலைவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கும், அதன் தலைவர் சம்பந்தனையும் நம்பி தங்களின் வாக்குகளை ஏன் போட்டார்கள் தெரியுமா? தமிழ் பேசும் மக்களுக்கு பெரும்பான்மை சமூகத்தினரால் உதாரணமாக இந்த பொதுபல சேனா போன்ற சில கூட்டத்தினரின் செயல்களை எதிர்த்துப் பேசவும், அது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கையினை சமர்ப்பித்து தக்க நடவடிக்கையினை எடுப்பார் என்று நம்பியவர்களாகத்தான் அன்றும், இன்றும், என்றும் தமிழ் மக்கள் செயற்பட்டார்கள்.

இன்று முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏற்பட்டுள்ள விடயங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டியவர்கள் எங்கே? இருக்கின்றார்கள். இந்த நிலைமையை முஸ்லிம் தலைவர்கள் என்ற பெயரலவில் அமைச்சுப் பதவி என்ற ஆசனத்தில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு செய்த விடயத்தை பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லையை?

சம்பந்தன் ஐயா இன்று முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்தில் தனது அறிக்கையினை சமர்ப்பித்து அதற்குத் நல்ல தீர்வு ஒன்று எதிர்காலத்தில் கிடைக்கும்போது சில முஸ்லிம் தலைவர்களாக அமைச்சுப் பதவியில் இருப்பவர்கள் சமூகத்துக்காக தான்; குரல் கொடுத்து செயற்பட்டதாக சொந்தம் கொண்டாட வருவார்கள். யாரோ செய்ய வேண்டிய வேலைகளை யாரோ செய்கின்றார். இறுதியில் தான் செய்ததாக சொந்தம் கொண்டாட வரும்போது அவர்களுக்கு வெட்கம் என்ற சொல் தெரியாதவர்களாக இருப்பார்கள்.

தமிழ் மக்கள் கூட்டமைப்பையும், அதன் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை நம்பியும், மதித்தும் தங்களின் வாக்குகளை வாரி வழங்கவது ஏன் தெரியுமா? இவ்வாறான நிலைமை சமூகத்திற்கு ஏற்படும் போது இந்த சந்தர்ப்பங்களில் தமிழ் பேசும் சமூகத்திற்காக குரல் கொடுப்பார்கள் என்ற நோக்கத்துக்காகவே! அவ்வாறு செயற்பட்ட தமிழ் மக்களின் நோக்கம், கனவுகள் என்றும் பிழைக்க கூட்டமைப்பினர் நடந்து கொள்ளமாட்டார்கள் என்பது இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

இலங்கையில் இருக்கும் சிறுபான்மை சமூகங்களில் ஒன்று  முஸ்லிம் சமூகம் அந்த சமூகத்துக்கு இன்று இப்படியான ஒரு நிலைமை என்றால் நாளை தமிழ் மக்களுக்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமே இல்லை. என்பது உறுதி என்ற விடயத்தினையும், தமிழ் பேசும் சமூகம் என்றால் முஸ்லிம்கள் வேறு தமிழர்கள் வேறு என்று கருதாமல் இன்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயாவை எமது சமூக சேவைகள் அமைப்பினரும், நானும் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். என்று அக்கரைப்பற்று சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.ஹனிபா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :