இலங்கையைச் சேர்ந்த மனைவியை மனநோயாளி வைத்தியசாலையில் சேர்த்த தமிழ்நாட்டு கணவன்.


லங்கை பெண் ஒருவர் சென்னையில் வாழும் தனது கணவனிடமிருந்து  20 இலட்சம் ரூபா நட்டஈடு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பெண்ணின் கணவனான காஜா மொகைதீன் என்பவரை நீதிமன்றுக்கு அழைத்து இந்த வழக்கை இணக்க சபைக்கு அனுப்பியுள்ளார்கள்.

இந்த பெண் 2002 ஆம் ஆண்டில் மருத்துவ மாதாக சவூதியில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது சாரதியாக பணியாற்றிய காஜா மொகைதீனை காதலித்துள்ளார்.

இருவருக்கும்  அம்பாறையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுடைய மகளுக்கு மூன்றரை வயதாக இருந்தபோது காஜா மொகைதீன் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு போய்விட்டார்.

இந்நிலையில் காஜா மொகைதீனை தேடி றிஸ்மியா சென்னைக்கு சென்றுள்ளார். அவரை தேடிப்பிடிப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அங்கு சென்றபோதுதான் காஜா மொகைதீன் திருமணமானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்பதனையும் றிஸ்மியா அறிந்துக்கொண்டார்.

இந்நிலையில் தன்னுடன் வாழ்க்கை நடத்துமாறு றிஸ்மியா கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் தனிக்குடித்தனம் நடத்துவதாயின் பணம் தேவையென்று கூறி காஜா மொகைதீன் றிஸ்மியாவை வற்புறுத்தி  சவூதிக்கு மீண்டும் அனுப்பிவைத்துள்ளார்.

சவூதியிலிருந்து 2008 ஆம் ஆண்டு சென்னைக்கு திரும்பிய றிஸ்மியா, காஜா மொகைதீனை தன்னுடன் வருமாறு அழைத்து நெருக்கடி கொடுத்துள்ளார்.

நெருக்கடி தாங்க முடியாத காஜா மொகைதீன் வைத்தியசாலைக்கு சென்றுவருவோம் எனக்கூறி றிஸ்மியாவை ஏமாற்றி அழைத்துசென்று ஊரப்பாக்கத்திலுள்ள மனநோயாளி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அந்த வைத்தியசாலையில் றிஸ்மியா 20 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு வைத்தியசாலையில் வைத்து கடுமையான மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் தரக்குறைவான உணவும் வழங்கப்பட்டுள்ளது.

20 மாதங்களுக்கு பின்னர் வைத்தியசாலை நிர்வாகம் ஆவணமொன்றில் தன்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்துவிட்டதாக றிஸ்மியா தெரிவித்துள்ளார்.

சவூதியில் ஏழு வருடங்களாக பணம் முழுவதையும் காஜா மொகைதீனிடம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தான், பல நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடம் உதவி கோரியிருந்தேன் உதவி கிடைக்காத நிலையிலேயே 20 இலட்சம் ரூபா நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்ததாக றிஸ்மியா கூறியுள்ளார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :