பொது பல சேனாவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற முடியாது-ராஜாப்தீன்

முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படுமாயின் மு.கா அரசிலிருந்து கட்டாயம் வெளியேறும். அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்வுகள் பாரிய அளவிலானவைகள் அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவான பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்காக முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற முடியாது என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹெல உறுமயவும் பொது பல சேனாவும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றன. ஊடகங்களும் மு. கா அரசிலிருந்து வெளிவறும் என்றே எதிர்ப்பார்ப்பார்க்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குள் ஜாதிக ஹெல உறுமய கட்சியை பலவீனப்படுத்துவதற்கே பொது பல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மு.காவின் உயர் பீடம் கூடியது. இதன்போது கட்சி கடுமையான தீர்மாணங்களை எடுக்கும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். எனினும் மின்கட்டண விவகாரமே அன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வெளிநாடுகணாளுக்கு சென்றிருந்தையால் அவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மாணங்களும் எடுக்கப்படவில்லை. இருந்த போதிலும் பாரளுமன்றில் மின்கட்டண விவகாரம் தொடர்பில் பலர் உரையாற்றிய போது மு.கா. எதுவும் பேச வில்லை என சுட்டிக்காட்டப்பட்டது ஷபீக் ரஜாப் தீன் குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் 7 ஆம் திகதி மு.காவின் உயர்பீடம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடவுள்ளது. அன்றைய தினம் மின்கட்டண விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :