பொதுமக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் சந்தேகிக்கப்படும் இருவரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறான குறுஞ்செய்திகளை தயாரித்து பரப்புவோரை கண்டுபிடிக்க விஷேட தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் அது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைப் பிரிவொன்றின் மூலம் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றங்கள் தொடர்பிலும் குறுஞ்செய்திகள் தொடர்பிலும் 011 23 20 145 அல்லது
011 23 20 141 என்ற பொலிஸ் குற்றவியல் பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.
0 comments :
Post a Comment