நகைக் கடை ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் புத்தளம் நகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் முஹம்மது முஜாஹிதுல்லாவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ஹேசான்த த மெல் இன்று 26.02.2013 உத்தரவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் புத்தளம் நகரத்திலுள்ள நகைக் கடையொன்றுக்குள் பிரவேசித்த நகர சபை உறுப்பினர் எம்.முஜாஹிதுல்லாஹ் நகைக்கடையில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த ஊழியர் புத்தளம் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நகர சபை உறுப்பினரை புத்தளம் பொலிஸார் இன்று 26.02.2013 காலை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த நகர சபை உறுப்பினரை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment