AD-இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐநா மனித உரிமை கவுன்ஸில் 22வது கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க செவ்வாய்க்கிழமை ஜெனீவா சென்றடைந்துள்ள நிலையில், நாளை 27ம் திகதி புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
மனித உரிமை கவுன்ஸில் 22வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (26) ஆரம்பமானது.
இதன்போது கருத்து வெளியிட்ட மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை பாரிய யுத்தக்குற்றங்களை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.
அத்துடன், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்கா என்பன வலியுறுத்தின.
இந்த நிலையில் இவை எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கும் வகையில் மஹிந்த சமரசிங்க நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
0 comments :
Post a Comment