பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிவந்தபிரசாந்த ஜெயகொடி பொலிஸ் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


VV-பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட  பொலிஸ்  அத்தியட்சகர் பிரசாந்த ஜெயகொடி பொலிஸ் திணைக்களத்தின் பரீட்சைகள் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தடவையாக பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய  ஜெயகொடிக்கு  அப்பதவியில் 03 மாதங்கள் மட்டுமே இதன்மூலம்  சேவையாற்ற முடிந்துள்ளது.

இந்நிலையில் புதிய பொலிஸ் பேச்சாளராக பொலிஸ் பரீட்சைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும்  பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :