ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள இலங்கையின் மனித உரிமைகள் மீதான விவகாரம். ஒருபார்வை.





பலநாட்களை நாமும் உலகமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளுக்கான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த 25.02.2013 ஆரம்பமாகின. இந்த ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கிய களமாகவும் உரிமைகள் விடயத்தில் கனத்த எதிர்பார்ப்புடன் நோக்குகின்ற மக்களுக்கு அதன் தளத்தை அறிவதிலும் ஆர்;வமாகவே இருப்பார்கள். 

ஐக்கிய நாடுகளின் சபையின் தலைமைக்காரியாலம் இன்னும் அதன் பல கிளைகள் அமெரிக்காவில் அமைந்திருந்தாலும் அதனது முக்கியமான சில கிளைகள் ஜெனீவா நகரில் அமைந்துள்ளன. அந்தவகையில்  அமையப்பெற்றுள்ள ஒன்றுதான் உலகமனித உரிமைகள் பேரவையாகும். இதன் செயற்பாடுகள் முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இதற்கான தலைமைக் காரியாலயமும் இங்குதான் உண்டு. அதுமட்டுமல்லாது இதில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்ற 47 நாடுகளில் அதிகமான நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவாகவே காணப்படுகின்றன என்பதுதான் உண்மையாகும்.

அதேவேளை இந்த அமைப்பில் ரஷ்யா சீனா கியுபா போன்ற நாடுகள் அங்கத்துவமில்லாமல் இருப்பதும் அமெரிக்காவை எதிர்த்து எதிர்வாதம் புரிகின்றளவுக்கு மற்றயை நாடுகளுக்கு திறாணியற்றநிலையும் காணப்படுவதால் அமெரிக்கா தான் நினைத்ததை நினைத்தபடி செய்வதற்கு மனித உரிமைகள் பேரவையை நன்றாகவே பயன்படுத்துகின்றது. 

பயன்படுத்தப்போகின்றது. அதேவேளை இந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான விடயங்களுக்கு இந்தியா பாக்கிஸ்தான் உற்பட பலநாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்காது கைவிடும் நிலையும் காணப்படுவதாகவே செய்;திகள் கூறுகின்றன.  

அண்மையில் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கூறுகையில் இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானும் இலங்கைக்கு எதிராக செயற்படப்போகின்றது என்றும் இலங்கைக்கு எதிராக பாரியளவிலான குற்றத்தை முன்வைக்கின்;;றபோது இலங்கை அதனை எவ்வாறு சமாளிக்கப்போகின்றது எதிர்வாதம் புரிவதற்கு அரசிடம் எவ்விதமான திட்டங்களும் கிடையாது. ஆதலினால் அரசு தோல்வியை ஒப்புக்கொண்டாகவேண்டும். போரின் பின்னரான காலப்பகுதியில் அரசு வடக்கில் சில அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளபோதிலும் பாதை அபிவிருத்தியைத் தவிரவும்; நல்லிணக்கமே முதன்மையானது. அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்திருந்தால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கைக்கு அதிகளவு ஒத்துழைப்பு கிடைத்திருக்கும் என்று அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து இப்பேரவையில் பங்குபற்றவென இலங்கையின் மனித உரிமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களது தலைமையில் தூதுக்குழு தற்போது ஜெனீவா சென்றுள்ளது. இலங்கைக்கு எதிராக எப்பந்து எவ்வடிவில் வந்தாலும் அதனைத் தடுக்கும் துடுப்புடன் களமிறங்கியுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகள்குழு எப்படியும் சமாளிக்கவே முயற்சிக்கும்.

 நாட்டுக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதனை வெற்றி கொள்ளத்தயார். நாட்டின் உண்மை நிலைமையை உலக சமூதாயத்திற்கு எடுத்துரைக்கவும் இடித்துரைக்கவுமென நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும் 27ஆந்திகதி இலங்கை நேரப்படி மாலை 4.20க்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது அமெரிக்காவின் அதிகாரத்திலுள்ள உலக அரங்கில் இலங்கை கொடுக்கப்போகின்ற அதிர்ச்சி வைத்தியம் மாறாமல் இருக்கத்தக்கதாக பலவிடயங்களில் அதிகளவு கவனம்செலுத்தியுள்ள நிலையில் உள்நாட்டில் மற்றொரு சிறுபாண்மையினமான முஸ்லீம்களின் மதரீதியான கொள்கையில் பேரினவாத சாயங்கள் கலக்கப்பட்டிருப்பது கடந்த மனித உரிமைகள் மாநாட்டில் அறபுலகம் இலங்கைக்கு சார்பாகவே நடந்து கொண்டமை யாவரும் அறிந்தவிடயம். ஆனால் இம்முறை உள்நாட்டுவாழ் முஸ்லீம்கள் விடயத்தில் ஹலால் விடயத்தில் முரண்பட்டுள்ள படியினால் அப்போது ஆதரவழித்த அறபுலகதினது சார்புகளும் ஆதரவுகளும் தற்போது கேள்விக்குறியாய் உள்ளதாவே வெளிநாட்டு ஊடகங்களின் கருத்துக்களிலிருந்து தெரியவருகின்றது.

எது எப்படி இருப்பினும் இலங்கையைப் பொறுத்தளவில் பீதி என்பது கடந்த 1983ஆண்டு தொடக்கம் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு உப ஆணைக்குழுவாக இருந்த காலங்கட்டத்திலிருந்து எதிர்நீச்சல்போட்டே வந்திருக்கின்றது. கடந்த 2006ஆண்டு முதல் ஐநா.மனித உரிமைகள் சபையாக மாற்றம் அடைந்ததிலிருந்து இன்றுவரையிலும் இலங்கை இவ்வாறான பிரச்சினைகளில் எதிர்கொண்டேதான் வருகின்றன.

 இம்முறையும் அதன் சமாளிப்பு நாட்டிலுள்ள அபிவிருத்திகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்ற கமென்வெல்த் ஒன்றுகூடல் கற்றறிந்த பாடம் நல்லிணக்கம் பற்றி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்றன ஊடாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தாத வகையில் வகைகூறுமளவுக்கு இலங்கையிடம் ஆவணங்கள் உண்டு என்று கூறினாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நீதித்துறையில் கடந்தமாதங்களில் ஏற்பட்ட சலசலப்புக்கள் அத்துடன் இலங்கை பற்றி ஐநா மனித உரிமைகள் ஆணையாளரினால் கடந்த 18ஆந்திகதிய அறிக்;கை இம்மாதம் 11ஆந்திகதி வெளியிடப்பட்டுள்ளமை போன்றவைகள் கடுமையான பயப் பீதியை உண்டுபண்ணியிருக்கும் என்றே கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த நவம்பரில் தப்பித்தவறி பரிந்துரைகளுடன் தப்பிப்பிழைத்த இலங்கைமீதான மனித உரிமைகள் கண்டனங்களுக்கு 'தவணைமுறை பூலோக மீளாய்வு' வின் பிரகாரம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்த ஐநா. சபை அங்கு இலங்கையிடம் அன்று 204 பரிந்துரைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவற்றில் 110 பரிந்துரைகளை மாத்திரமே ஏற்றுக் கொண்டு மிகுதியாகவுள்ள 94 பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாது மறுத்தமையும் நினைவிருக்கலாம். இவ்வாறு ஏற்க மறுத்த 94 பரிந்துரைகளில் சிலவற்றை அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள கண்டனப் பிரேரணையில் சேர்க்கப்படலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன.

 எதிர்வரும்  2015ஆண்டுவரையான காலப்பகுதி வரைக்கும் மனித உரிமைப்பேரவையில் அமெரிக்காவின் கை ஓங்கி ஒலிக்கப்போகின்றது. எவ்வித தங்குதடையுமின்றி அது நினைக்கும் கண்டங்களை சில நாடுகளுக்கு எதிராக கொண்டுவரத்தான்போகின்றது. அதில் இலங்கையும் ஒன்று என்பதை அமெரிக்காவினதும் ஐநா மனித உரிமை ஆணையகத்தினதும் வலுவாக்கமான எண்ணப்பாடாகும் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

இலங்கையில் அண்மைக்காலமாக பொருளாதாரரீதியாக பலமாற்றங்கள் ஏற்பட்டாலும் எரிபொருட்களின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதன் காரணாக பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்பு அது பொதுமக்களுக்கு கஷ்டமான ஒரு சமாச்சாரமாவே காணப்படுகின்றது என சாதாரண பொதுமகனும் கூறுவதுண்டு. இந்நடவடிக்கையானது பொருட்களின் விலையேற்றம் அடிக்கடி ஏற்பட்டுவரும் உள்நாட்டு நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படுகின்ற இயற்கைக் காரணிகள் போன்றனவும் இலங்கை வாழ்மக்களுக்கு கிடைத்துள்ள பாரிய சோதனைகளாகும். கிழக்கில் விவசாய உற்பத்தியில் வெள்ளம் பாரிய அடியைக் கொடுத்துள்ளது.

 மனித உரிமைகள் விடயத்தில் அரசு கடுமையான எத்தனங்களை எடுத்துரைத்து வந்தாலும் சிலவேளைகளி;ல் இராணுவத் தலையீடுகள் காரணமாக சில இடங்கள் மறுதலிக்க முடியாமலே போய்விடுகின்றன. உண்மையான ஆட்சியாளர்களாக இருக்கவேண்டுமாக இருந்தால் நாட்டுப் பற்றார்களாக  மாறவேண்டும். நாட்டுப் பற்றுக் கொண்டு இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய கருமங்களை மேற்கொள்கின்றபோது நாடு அமைதியான ஒரு அமைதிப்பூங்காவாகவே மாற்றம் அடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அரசியலின் ஆதிக்க வெறியில் அவதியுறும் இந்தியா பங்காளதேஷ் போன்ற நாடுகளிலுள்ள நிலைமைகளும் இவ்வாறுதான் அமைந்துள்ளன. நமது சிந்தனைகள் எல்லாம் நமது நாட்டைப்பற்றியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பேணிபாத்து ஒழுக்கமுள்ள சமுகமாக மாற்றம் பெறவைப்பதேயாகும். ஆனால் நடைபெறுவதில்தான் சிக்ககல்கள் தோன்றுகின்றன. இன்று அனைவரும் ஜெனீவா ஜெனீவா என்கிறோம். எம்மைப்போன்ற மக்களும் பல்லின பல்மொழி பேசும் பலநாட்டு மக்கள் ஒன்றாக அமைதியாகவே அங்கு வாழ்கின்றார்கள். அங்குள்ளவர்களுக்கு வெளிநாட்டான் என்றும் நமக்குள்ளே எத்தனை எத்தனை பேதங்கள். 

ஹலாம் என்றும் ஹறாம் என்றும் மார்தட்டுகின்ற பேரினவாத சக்திகள் சமதர்மத்தை போதிக்கும் புத்தர்தொடக்கம் முஹம்மது நபி வரை நல்லவற்றையும் நாளைய சந்ததிகள் சந்தோஷமாக வாழத்தானே அனைவரும் வழிகாட்டிகளாக இவ்வுலகில் அவதரித்தார்கள். அவர்களைப் பின்பற்றுகின்ற மக்களாக நாம் வாழ்வோமானால் நமக்குள்ளே எதற்கு பேதம். இறந்தவுடன் ஆறடி மண்ணுக்காக வாழும் நிலைமையை நாம் உணரந்து கொள்ளாமல் எமக்குள்ளே எத்தனை எத்தனை போராட்டங்கள் வெறித்தனங்கள். இவற்றையெல்லாம் மறந்து ஜெனீவா நகர் அமைந்துள்ள சுவிர்சர்லாந்து நாட்டையும் அங்கு வாழ்கின்ற மக்களையும்போல ஏன் நாம் வாழமுடியாது.  அதனால்தான் இன்று எந்த சமாதான மாகாநாடுகள் என்றாலும் அவை நடைபெறும் தளமாக ஜெனீவா காணப்படுகின்றமை அந்நாட்டு மக்களிடம் காணப்படும் மனிதாபிமானமான செயற்பாடுகள்தான் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

அந்தவகையில் தற்போது அரங்கேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் இன்னோரன்ன நடவடிக்கைளுக்கு ஆப்பு வைக்கும் அதிர்ச்சி வைத்தியம் வழங்கும் ஒரு செயற்பாடாக அடுத்த மார்ச் மாதம்மாதம் 22ஆந்திகவரையிலும் உலக மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறப்போகும் விடயங்கள் இலங்கை மீது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் தவறுகள் அனைத்தும் சுட்டிக் காட்டப்படுமாக இருந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கேடயத்தையும் தைரியாக எடுத்தாள அமைச்சரும் ஏனைய தலைசிறந்த வாண்மையாளர்களும் தயாராகிக் கொண்டே இருக்கின்றார்கள். இது  இலங்கைக்கு பாதமாக அமையுமா? சாதகமா அமையுமா? என்பதைவிட இவ்வாறான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இலங்கை மாதாவின் புதல்வர்களான நாம் ஒருமுறை நமக்குள்ளே ஏற்பட்டுள்ள தவறுகளை சிந்திக்கும் மக்களாக மாறுவோமாக இருந்தால் இவையாவுமே வீண்.வீண்.வீணே.

இவையாவும் ஒருபுறமிருக்க ஜெனீவாவை நகரத்தை உள்ளடக்கிய அந்த நாட்டைப்பற்றியும் அங்குள்ள நிலைமைகளையும் இச்சந்தர்ப்பத்தில் நாம் அறிந்திருந்தல் நலமாய் அமையும் என்பதால் சில விடயங்களை மாத்திரம் எடுத்தாள்வோம். சுவிட்சர்லாந்து ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அமைதி நிறைந்த அழகிய நாடாகும். 

பொதுவாகவே சுவிட்சர்லாந்து 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசுடன் காணப்படும் மண்டங்கள் நிறைந்த நாடாகும். அதிகாரத் தலைநகரமாக பெர்ன் நகரமும் பொருளாதார மையங்களாக விளங்கும் நகரகங்களாக ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன. ஆல்ப்ஸ் மலைத் தொடர் சூழப்பட்டுள்ள மத்திய ஐரோப்பிய நாடாக விளங்கும் சுவிட்சர்லாந்தின் வடக்கே ஜேர்மனி மேற்கே பிரான்சு தெற்கே இத்தாலி கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் நாடுகள் எல்லைகளாக காணப்பட்டாலும் 1848 ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த தனிநாடாக மாற்றம் பெற்றது.

இங்கு 7.7மில்லியன் மக்கள் தொகை(2009)யும் இங்கு பல்லிண மக்களும் பல்மொழி பேசும் மக்களும் அமைதியாக வாழ்ந்து வருவதுடன் இந்நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது.

 உலக செஞ்சிலுவைச் சங்கம் உலக வர்த்த அமைப்பு உலகசுகாதார  அமைப்பு போன்றன ஐக்கிய நாடுகளின் அமைவிடங்களும் ஏனைய 200க்கும் மேற்பட்ட உலகின் கவனத்தை ஈர்க்கும் மையங்களும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள இந்நாட்டில் உற்பதியாகும் கடிகாரம் தொடக்கம் வங்கிச் சேவை வரையிலும் உலகின் கனிவான மக்களுடன்கூடிய மனித உரிமைகளை மதிக்கின்ற பேனிவருகின்ற இந்நாடு ஐநா. சபையினை ஏற்றுக்கொண்ட நாடாக காணப்பட்டாலும் கடந்த 2002ஆம் ஆண்டிலேயேதான் ஐநா.சபையில் இணைந்து கொண்டது என்றால் அவர்களது மனிதாபிமானத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளமைக்கு இதுவோர் அச்சாணியாகும். அதேவேளை இன்றுவரையிலும் எவ்வித சண்டை சச்சரவுகளில் பங்கு கொள்ளாத ஒருநாடாகவும் அமைதிப் பூங்காவாகவும் காணப்படும் இந்நாட்டில் இவ்வாறான மனித உரிமைகள் பற்றிய மீளாய்வுகளும் பரிந்துரைகளும் கண்டனங்கள் பற்றிய அறிக்கைகளும் இடம்பெறுகின்றமை பொருத்தமானதாகவே பார்க்கப்படுகின்றது.

(எஸ்.எல். மன்சூர்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :