(எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்)பாராளுமன்றம்தான் இந்நாட்டின் அதிஉச்ச அதிகாரத்தைக் கொண்ட ஒரு நிறுவனம் என்பது இன்று நிருபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை எந்த சக்தியாலும் கேல்விக்குட்படுத்த முடியாது. இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஆலையடிவேம்பு பிரதேச ஒருங்கினைப்புக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வறுமையற்றதோர் இலங்கைத் தேசம் நிகழ்ச்சித் திட்டத்தை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட அலுவலகர்களையும், கிராம மக்களையும் அறிவுறுத்தும் ஒரு நாள் செயலமர்வு இன்று ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றபோது, அதற்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே பியசேன எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு nhடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கல் நிருபிக்கப்பட்டதினாலேயே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவில் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் இறையான்மை பாராளுமன்றம்தான். அந்தவகையில் பாராளுமன்றம் நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையாகும்.
இந்நாட்டின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் மக்களையும் சட்டத்தையும் மதித்து செயற்படக் கூடியவர். இலங்கையில் வறுமையற்றதோர் மக்கள் சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். எல்லா இன மக்களும் எல்லா உரிமைகளும் பெற்று வாழவேண்டும் என்ற நன்நோக்கில் அவர் செயற்படுவதினால்தான் எல்லாத் தேர்தல்களிலும் அரசாங்கம் பெரு வெற்றியினைப் பெறுகின்றது.
இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எத்தனையோ சக்திகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் அத்தனை சூழ்ச்சிகளும் இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அரசாங்கத்திலும் இல்லாத பாரிய அபிவிருத்திப்பணிகள் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் நடைபெற்றுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் எனது செயற்பாட்டில் நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி கடைசிவரை பயன்படுத்தப்படும். மக்கள் நன்றி உள்ளவர்களாக இந்த அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும்.
இன்று முன்னடுக்கப்பட்டு வரும் திவிநெகும திட்டம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் அதிர்ஸ்டமாகும். ஒவ்வொரு பிரஜையும் சொந்த முயற்சியில் தொழில் செய்து முன்னேற்றம் அடையவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என்றார்.
இச்செயலமர்வில், ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் இரத்தினவேல், பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸன் உட்பட அரச உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment