(எஸ்.எம்.அறூஸ், எம்.ஐ.எம்.பைஷல்)அக்கரைப்பற்று மக்கள் வங்கியினால் புதுவருடத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்று 2013-01-01 இல் பிறந்த குழந்தைகளுக்கு அன்பளிப்பாக இசுரு உதான சேமிப்புக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எம்.நஸீர், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எம்.தாஸீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் கபில ஹங்வெல்ல, மற்றும் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபில், உளவள வைத்தியப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.எம்.நௌபல், டாக்டர் ஏ.ஆர்.முகம்மட் அலி, டாக்டர் ஏ.எம்.முனவ்வர், டாக்டர் பஸீலா நபில், டாக்டர் ஜாரியா ஆகியோர் குழந்தைகளின் தாய்மார்களிடம் கணக்குப் புத்தகங்களையும், அன்பளிப்புப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.









0 comments :
Post a Comment