கணவனின் கண் எதிரே மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெருமதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜகநாதபூர் பகுதியில்தான் இந்த அவலம் நடந்துள்ளது. செங்கல் சூளையில் வேலைபார்க்கும் தனது கணவனைத் தேடிச் சென்ற 45 வயது நிரம்பிய பெண்ணை, அங்கிருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறது.
வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத மனைவியை தேடி கணவன் அவ்வழியே வரும்போது, தன் மனைவிக்கு நிகழ்ந்த கொடுமையை கண்டு, அவளை காக்க குற்றவாளிகளை தாக்க முயன்றார். இதனால் கோபமுற்ற காமுகர்கள் கணவனில் வாயில் விஷம் கலந்த மதுவினை ஊற்றி அவனை கடுமையாக தாக்கி கொல்லமுயன்றனர்.
கணவன் மனைவி இருவரும் பரஸ்வாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக இவர்களின் மகன் அலாபாஸ் அலி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவது அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :
Post a Comment