கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் நிசாம்.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளராக தற்போது கடமையாற்றும் நிசாமே மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய தனது கடமைகளை நிசாம் நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

ஏற்கனவே கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிசாம், மாகாண ஆசிரிய இடமாற்றத்தினால் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டார்.

இந்நிலையிலேய மீண்டும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ரீ.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான நிசாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது  செயலாளர் எம்.ரீ.ஹசன் அலியின் சகோதரருமாவார்.
நன்றி றிப்தி..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :