நவீன இலத்திரனியல் சாதனங்களை நூதனமான முறையில் கொள்ளையிட்டு வந்த பெண்களை கொண்ட கொள்ளைக் கோஷ்டி கைது செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பெண் கும்பல் கொள்ளையிட்டுள்ளது. மிகவும் நூதனமான முறையில் இந்தக் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் எல்.ஈ.டி. மற்றும் எல்.சீ.டி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் கும்பலொன்று பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சுரங்கீ என்ற 25 வயதான பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார். முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
மீரிகமவைச் சேர்ந்த பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர். சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment