(எம்.பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்) BUDGET
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் எந்த வாக்கெடுப்புக்களும் இல்லாமல் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2013 ஆம் வருடத்துக்கான வரவு - செலவுத்திட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலினால் நேற்று (2012.12.26) சபையில் முன்வைக்கப்பட்டது. இச்சபையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 6 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நிகழ்ச்சித் திட்ட வருமானமாக மீண்டுவரும் வருமானம் பின்வருமாறு;
பொது நிருவாகத்தில் - 2 கோடி 71 இலட்சத்து 14 ஆயிரத்து 350 ரூபாவும், சுகாதாரம் - ஒரு கோடி 40 இலட்சத்து 99 ஆயிரத்து 640 ரூபாவும், பௌதீகம் - 10 இலட்சம் ரூபாவும், பொதுப் பயன்பாடு – 32 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாவும், நலன்புரிச் சேவை – 36 ஆயிரம் ரூபா என்ற அடிப்பமையில் மொத்த மீண்டுவரும் வருமானமாக 4 கோடி 54 இலட்சத்து 65 ஆயிரத்து 990 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சித் திட்டத்தின் படி மூலதன வருமானமாக பௌதீகம் - 10 கோடி 68 இலட்சம் ரூபாவும், நலன்புரி சேவை – 4 இலட்சம் ரூபா என மொத்த மூலதன வருமானமாக 10 கோடி 72 இலட்சம் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டன.
இதன்படி நிகழ்ச்சித் திட்ட செலவினமாக மீண்டுவரும் செவினம் பின்வருமாறு;
பொது நிருவாகம் - 81 இலட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாவும், சுகாதாரம் - ஒரு கோடி 70 இலட்சத்து 89 ஆயிரத்து 200 ரூபாவும், பௌதீகம் - 26 இலட்சத்து 750 ரூபாவும், பொதுப் பயன்பாடு – 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், நலன்புரிச் சேவை – 58 இலட்சத்து 24 ஆயிரத்து 725 ரூபா என்ற அடிப்படையில் மொத்த மீண்டுவரும் செலவினமாக 3 கோடி 52 இலட்சத்து 13 ஆயிரத்து 175 ரூபா என தெரிவிக்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சித் திட்டத்தின் படி மூலதனச் செலவினமாக பொது நிருவாகம் - 4 இலட்சம் ரூபாவும், பௌதீகம் - 11 கோடி 65 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், நலன்புரிச் சேவை – 5 இலட்சம் ரூபா என மொத்த மூலதகச் செலவினமாக 11 கோடி 74 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டன.
மீண்டுவரும் வருமானத்திலும், மூலதன வருமானத்திலும் மொத்த வருமானமாக 15 கோடி 26 இலட்சத்து 65 ஆயிரத்து 990 ரூபா வருமானமாகவும் இதில் மீண்டுவரும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் என மொத்தச் செலவினமாக 15 கோடி 26 இலட்சத்து 63 ஆயிரத்து 175 ரூபா செலவினம் என தெரிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் செலவிலும் மிஞ்சிய வரவாக 2 ஆயிரத்து 815 ரூபா வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சமயம் மு.க. சார்பில் பிரசன்னமாகியிருந்த உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.அப்துல் மனாப், என்.எல்.ஜாசிர் ஐமன், ஏ.எல்.கால்டீன் மௌலவி ஆகியோரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர் கட்சி தலைவர் எம்.ஐ.எம்.பாரீன் மற்றும் எஸ்.றியாஸ் ஆகியோர் பிரசன்னமாகி தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
2013 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை தவிசாளர் சமர்ப்பித்த போது எதிர்க் கட்சியினரால் எந்த எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்படாமல் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வரவு – செலவுத்திட்ட நிகழ்வு முடிவுற்றவேளை பிரதேச சபைச் செயலாளர் ஏ.அப்துல் சித்திகினால் தவிசாளர், உதவித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான தினக்குறிப்பேடு (டயறி) வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment