அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தரை திட்டமிட்டு புறக்கனிப்பு, விளையாட்டு வீரர்கள் விசனம்.



38வது தேசிய விளையாட்டு விழாவின்போது 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றிய அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த ரஜாஸ் கானுக்கு ஒலுவில் பிரதேச மக்களாள் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும், மற்றும் பாராட்டு விழாவும் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பலரும் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல் தாஜூதீன் அழைக்கப்படாததனையிட்டு அப்பிரதேச விளையாட்டு வீரர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விளையாட்டுத்துறைக்கு நீண்ட காலமாக சேவையாற்றி வரும் எஸ்.எல் தாஜூதீன் இப்பிரதேசத்திலுள்ள பல விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கும் சாதனைக்கும் அயராது உழைத்தவர் இவரினால் பயிற்சியளிக்கப்பட்ட பல வீரர்கள் மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்து இலங்கை இராணுவ விளையாட்டுப் பிரிவிலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல் தாஜூதீனால் ஆரம்ப பயிற்சி பெற்று சாதனையை நிலைநாட்டிய ரஜாஸ் கான் இலங்கை இராணுவ விளையாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார். இவருடைய சாதனைக்கு ஊக்கமளித்தவர் என்ற வகையிலும், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் என்ற வகையிலும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

சிமாஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :