சஊதி அரேபியா யன்புவில் தொழில்புரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 34 கிருஸ்தவ சகோதரர்கள் ஒரே நேரத்தில் புனித இஸ்லாத்தை தழுவிய சம்பவம் அன்மையில் நடைபெற்றது. யன்பு இஸ்லாமிய தஃவா நிலையத்தில் தொடராக கல்வி கற்றுவந்த மேற்படி சகோதரர்கள் தங்களது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு கலிமா ஸஹாதாவை மொழிந்தமை அங்கு வாழும் அரேபிய சகோதரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இதேபோன்று கடந்த முஹர்ரம் மாதத்திலும் இலங்கை, இந்தியா, எத்தியோப்பியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 21 சகோதரர்கள் இந்நிலையத்தினூடாக இஸ்லாத்தைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.
யன்பு இஸ்லாமிய தஃவா நிலையத்தின் பிரச்சாரப்பிரிவில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல்வேறு மொழிகளுக்கு பொறுப்பாகவிருந்து பணியாற்றிவரும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் உப தலைவரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நஸீர்தீன் அவர்களின் சகோதரருமான சகோ. ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் அயராத முயற்சியின் பலனாக அல்லாஹ்வின் நாட்டத்தினால் இவ்வருடத்தில் மாத்திரம் இவ்வாறாக 147 பேர் புனித இஸ்லாத்தைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த செய்திகள் சஊதியில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகளுக்கு தன்னுடைய பொருளாதாரங்களை தாராளமாக வழங்கிவரும் சகோதரர் ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் இலங்கையில் செயல்படும் தௌஹீத் பிரச்சார அமைப்புக்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் சமூக நிறுவனங்களின் தேவைகளுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment