கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்

Share on

மரண வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபையின் தலைவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

கந்தளாய் - பாத்தியகம பிரதேச வீடொன்றில் நேற்று (10) நடைபெற்ற மரண சடங்கொன்றில் கலந்து கொள்ள கந்தளாய் பிரதேச சபைத் தலைவர் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவர் பிரதேச சபைத் தலைவரை திட்டி பின் கடுமையாகத் தாக்கியுள்ளார். 

தாக்குதலில் படுகாயமடைந்த பிரதேச சபைத் தலைவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று (11) கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கந்தளாய் பொலிஸார் குறிப்பிட்டனர். 

 (தெரண )இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :