காரைதீவு பாலர் பாடசாலையின் விடுகை விழா - பிரதம அதிதி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை

Share on

(ஏ.எல். ஜனூவர் )







கிழக்கு மாகாணத்தின் தமிழ் , முஸ்லிம் மக்களின் வரலாற்றுப் பூர்வ உறவுகள் மீண்டும் வளர்ச்சி அடைந்து வருகின்றது இவ் இன நல்லுறவை தொடர்ந்தும் கட்டியயெழுப்ப அனைவரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் அத்தோடு கல்வியென்பது அழியாத சொத்தாகும் கல்வி கொடுப்போர் இறந்தும் நண்மைகளை பெறுவர் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் இன்றியமையாதது அத் தேவையை உணர்ந்து சேவையாற்றும் பி.எஸ். சர்வதேச ஆங்கிலக் கல்வி நிறுவகத்திற் வாழ்த்து தெரிவிப்பதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணம் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்திhர்.

காரைதீவு பி.எஸ் சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த சான்றிதழ்வழங்கும் மற்றும் கலை நிகழ்ச்சி காரைதீவு விபுலாநந்தர் நிணைவகத்தில் பி.எஸ். சர்வதேச பாலர் பாடசாலையின் பணிப்பாளர் பி. பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார.

இந் நிகழ்வில் காரைதீவு பிதேச சபைத் தவிசாளர் செல்லையா இராசையா கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ். திலகராஜா, பொறியியலாளர் டீ. சிவசுப்ரமணியம், டாக்டர் ஏ. சிவசுப்ரமணியம், டாக்டர். பத்மநாதன் உட்பட பெற்றோர்களும் கலந்து கொணடார்கள்;.

இதன் போது பாலர் பாடசாலையில் சிறப்பாய் கலை நிகழ்ச்சியில் செய்தோருக்கு பரிசுகளும், விடுகை பெறும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :