ஒலுவிலில் சாதனையாளனுக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சிப்பெருவிழா..


(அட்டாளைச்சேனையிலிருந்து எஸ்.எல்.மன்சூர்)

அண்மையில் தேசியரீதியில் கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப்போட்டியில் குறுகிய நேரத்திற்குள் 200மீற்றர் ஓட்டத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்ற ஏ.ஆர். றஜாஸ்கான் எனும் ஓட்டவீரனுக்கு தனது சொந்த ஊரான ஓலுவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சிப்பெருவிழா ஒன்றினை இன்று(2012.12.25) நடாத்தினர். இந்நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்ற  தங்கமகனுக்கு ஊர்மக்களும், சிறப்பதிதிகள் எனப் பலரும் பாராட்டி கௌரவம் வழங்கிய கண்கொள்ளாக் காட்சி ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய எம்.எச்.எம். அஷ்ரப் கேட்போர் கூடத்தில் ஒலுவில் OSDS, Public & Sports Club ஊடரடி ஆகிய விளையாட்டுக் கழகங்கள் இணைந்து நடாத்தினர்.

ஒலுவில் பிரதேசம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வாகனப் பவணியில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட ஓட்டவீரன் ஏ.ஆர். றஜாஸ்கானை வரவேற்று நடைபெற்ற மாபெரும் இந்நிகழ்வினை அழகு தமிழில் தொகுத்து வழங்கினார் ஆசிரியர் கலைப்பிறை ஜே.வகாப்தீன். இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உதவித்தவிசாளர் ஏ.எல்.எம். அமானுல்லாஹ்;, உறுப்பினர்களாக என். யாசிர் ஐமன், எஸ்.எல்;. முனாஸ், எம்.றியாஸ், விளையாட்டதிகாரி எம்.பி.எம். ஆஸாத், ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவர் எம். இஸ்மாயில், சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்ஏ. பசூர்தீன், கூட்டுறவு பிரதிப் பணிப்பாளர் வை.எல்.எம் பகுர்தீன் மற்றும் பல அதிதிகளும் பங்குபற்றிய இந்நிகழ்;வுக்கு அதிபர் எம்.பி.எம். அரூஸ் தலைமைதாங்கினார். இந்நிகழ்வில் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டவீரனுக்கு அனைத்து அதிதிகளும், உறவினர்களும், ஊர்மக்களும் மாலைகள் சூடியும், நினைவுச்சின்னங்களும் பரிசாக வழங்கப்பட்டதுடன், தேசிய சாதனையாளன் ஏ.ஆர். றஜாஸ்கானுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் அதிதிகளினாலும், பொதுமக்களினாலும் பொன்னாடைகள் பல போர்த்திக் கௌரவம் வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :