தாயையும் மகளையும் பலிகொண்ட நுளம்புச் சுருள்.

Share on

குளியாபிட்டி - சேனாதிகம - தண்டுகமுவ பிரதேச வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் தாய் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.
இத்தீ விபத்து இன்று (01) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தீ ஏற்பட்ட போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 37 வயதுடைய ஜவனா குமாரி (தாய்) மற்றும் 8 வயதுடைய நெத்மி மலீசா (மகள்) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ ஏற்பட்ட வேளை குறித்த வீட்டில் தந்தையும் 1 வருடம் 10 மாதம் நிறைந்த குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
நுளம்பும் தொல்லையை கட்டுப்படுத்த வீட்டுக்குள் இரவில் கொளுத்திவைத்த நுளம்புச் சுருள் தீ பரவக் காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :